ஒருவரை அடிமைப்படுத்தக்கூடிய போதைப்பொருளான மதுச்சாரம் சமூகத்தில் பரந்திருப்பதுடன் சட்டரீதியாக கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது.இது பலரால் கிளர்ச்சியூட்டக்கூடிய பொருளாகவும் நுகரப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட விளைவை அடைவதற்காக குடிக்கும் தருணங்களும் அளவும் அதிகரிக்குமாக இருந்தால், அது ஒரு ஆபத்தான, தவறான மற்றும் அடிமைப்படுத்தக்கூடிய நுகர்வைக் குறிக்கும். மது பாவனைக்கு அடிமைப்படுதல் என்பது அப்போதைப்பொருளை கையாள்வதில் கட்டுப்பாட்டை இழத்தல் மற்றும் அதிகரிக்கும் எதிர்மறையான விளைவுகளுடன் வகைப்படுத்தப்படுகின்றது. சுமார் 250,000 சுவிஸ் மக்கள் குடிப்பழக்கத்தால் பாதிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 2000 பேர் மது அல்லது போதைப் பழக்கத்தின் விளைவுகளால் இறக்கின்றனர்.
அடிமைத்தனத்தின் வளர்ச்சியின் பின்னணிகள் பல்வேறு வகைப்பட்டுள்ளதுடன் தனிப்பட்ட மற்றும் பல்வேறு காரணிகளை உள்ளடக்கியது. இதைப் புரிந்துகொள்வதற்கும் நோயிலிருந்து மீள ஒரு வழியைக் கண்டுபிடிப்பதற்கும், பல வேறுபட்ட அணுகுமுறைகள் உள்ளன, அவற்றைப்பற்றி உங்களுடன் ஆலோசனையின் போது விவாதிக்க நாங்கள் ஆவலாக இருக்கின்றோம். நீங்கள் மது அருந்துவதை விமர்சன ரீதியாக கேள்வி கேட்க விரும்பினாலும், நாங்கள் உங்களுக்கு பதிலளிக்க தயாராக இருக்கிறோம்.
குடிப்பழக்கம் குடிப்பவரின் குடும்பத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது. உங்களுக்கு நெருக்கமான ஒருவரைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டால், உங்கள் கவலைகள் மற்றும் கேள்விகளுக்கான தொடர்பு கொள்ளப்படவேண்டிய நபர்களாகவும் நாங்கள் இருக்கிறோம்.
தொடர்பு
நீல குருதி / MUSUB ஐ அறிய விரும்புகின்றீர்களா, எங்கள் முன்னேற்றங்கள் அல்லது சில பொருட்கள் மற்றும் அடிப்படைத்தன்மைகள் பற்றி கேள்விகள் உள்ளனவா? நாங்கள் இலவசமாக, இரகசியமாக மற்றும் எளிமையாக உங்களுக்கு உதவுகின்றோம்.
061 261 56 13
திங்கள் முதல் வெள்ளி வரை, ஒவ்வொரு நாளும் காலை 8:30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை.