காணொளி விளையாட்டுக்கள் கவர்ச்சிகரமான மற்றும் பொழுதுபோக்காகும், இருப்பினும், ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் காணொளி விளையாட்டுக்களை விளையாடுவது ஆபத்தானது. ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்தில் 12 முதல் 19 வயதுக்குட்பட்ட 66 சதவீத இளைஞர்கள் காணொளி விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். இவ்விளையாட்டாளர்களில் குறைந்தது 5 சதவிகிதத்தினர் பிரச்சனைக்குரிய பாவனையையும் மற்றும் குறைந்தது 1 சதவிகிதத்தினர் அடிமைத்தனப் பாவனையையும் கொண்டுள்ளனர். சிறுவர்கள் சிறுமிகளை விட அடிக்கடி பாதிக்கப்படுவது தெளிவாக தெரிகின்றது. பெரியவர்களை விட இளம் பருவத்தினர் அதிக ஆபத்தில் இருப்பதாகத் தெரிகிறது. ஃபர்ஸ்ட்-பர்சன் ஷூட்டர்கள், அதிரடி-சாகசங்கள் மற்றும் குழுவிளையாட்டுகள் ஆகியன மிகவும் பொதுவான விளையாட்டுகள் ஆகும்.
விளையாட்டு அடிமைத்தனத்தின் பொதுவான அறிகுறிகள் பள்ளியில் தரம் குறைதல், முன்னுரிமைகளில் மாற்றங்கள் (பொழுதுபோக்குகள் மற்றும் நண்பர்கள் திடீரென்று இனி முக்கியமில்லை என்ற நிலை), மனநிலை மற்றும் நடத்தை மாற்றங்கள் போன்றன.
காணொளி விளையாட்டுக்களின் அதிகப்படியான பயன்பாடு ஒரு முதலாவது அறிகுறியாக புரிந்து கொள்ளப்படவேண்டும். நபர்கள், குறிப்பாக இளைஞர்கள், வேலையில், பள்ளியில், குடும்பத்தில் அல்லது நண்பர்களுடனான உறவில் சிரமங்கள் உள்ளவர்கள், தங்கள் பதற்றங்களையும் உணர்ச்சிகளையும் தங்களால் சிறப்பாகக் கட்டுப்படுத்தக்கூடிய இவ்வுலகுக்கு இணையான இன்னொரு உலகத்திற்குத் தப்பி ஓடுகிறார்கள். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சொந்த பிரச்சினைகளை எதிர்கொள்வதையும் அவர்கள் தங்களை மேலும் வளர்த்துக் கொள்வதையும் இத்தீவிரமான விளையாட்டு தடுக்கலாம்.
பொதுவாக, வீரருக்கு வெற்றிகள், புள்ளிகள் அல்லது உருப்படிகள் குறுகிய இடைவெளியில் வெகுமதி அளிக்கப்படும். இதன் பொருள், ஒவ்வொரு சில வினாடிகளுக்கும் மூளையில் மகிழ்ச்சியான ஹார்மோன்கள் வெளியிடப்-படுகின்றன, இது வீரருக்கு நல்ல உணர்வைத் தருகிறது மற்றும் தொடர்ந்து விளையாடுவதை ஊக்குவிக்கிறது. மகிழ்ச்சி ஹார்மோன்களின் இந்த நிலையான வெளியீட்டிற்குப் பழகுவது, தீவிர நிகழ்வுகளில், காணொளி விளையாட்டுப் போதைக்கு வழிவகுக்கும்.
இப்படித்தான் நாங்கள் உங்களுக்கு உதவுகின்றோம்.
இளைஞர்களுக்கான சலுகை: காணொளி விளையாட்டுக்களின் ஆரோக்கியமான பயன்பாட்டை மேம்படுத்த நாங்கள் உங்களுக்கு உதவுவோதோடு நாங்கள் உங்களுக்காக இருக்கின்றோம்.
தொடர்பு
நீல குருதி / MUSUB ஐ அறிய விரும்புகின்றீர்களா, எங்கள் முன்னேற்றங்கள் அல்லது சில பொருட்கள் மற்றும் அடிப்படைத்தன்மைகள் பற்றி கேள்விகள் உள்ளனவா? நாங்கள் இலவசமாக, இரகசியமாக மற்றும் எளிமையாக உங்களுக்கு உதவுகின்றோம்.
061 261 56 13
திங்கள் முதல் வெள்ளி வரை, ஒவ்வொரு நாளும் காலை 8:30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை.