Header Image

சமூக ஊடகங்கள்

யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் அல்லது டிக்டாக் போன்ற சமூக ஊடகங்கள் இன்றைய உலகில் இன்றியமையாததாகிவிட்டன. அவை உலகத்துடன் உள்ளடக்கத்தை எளிதாகப் பகிரவும், ஒருவருக்கொருவர் ஊடாடவும், ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளவும், அனுமதிக்கின்றன. ஆனால் கவனம் தேவை - சமூக வலைப்பின்னல்களில் ஆபத்துகளும் மறைந்துள்ளன.

விளம்பர அனுசரணையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் பயனர்களை முடிந்தவரை தங்கள் தளத்தில் வைத்திருப்பதே இந்நிறுவனங்களின் நோக்கமாகும்.

ஓயாத உறுதிப்படுத்தல், பல வண்ண அறிவிப்புக்குறிகள் மற்றும் பிற நேர்மறை வடிவமைப்பு கூறுகள் ஆகியவை பயனர்களை இணையத்தில் விருப்பத்துடன் செயற்பாட்டில் வைத்திருக்க பயன்படுத்தப்படுகின்றன. தொடர்புடைய உள்ளடக்கங்களின் வழங்கலானது முடிவற்றதாகத் தோன்றுகின்றது. அழகூட்டப்பட்ட படங்கள், மகிழ்ச்சியான குறுகிய உரைகளுடன் கூடுதலாக மற்றவர்களின் வாழ்க்கையில் சிறந்ததை மட்டுமே காட்டுகின்றன. நாம் பார்க்கும் உள்ளடக்கம் கணிப்பு நெறிமுறையூடாக கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படுவதால், எங்களால் விரும்பப்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகமாக இருக்கும். சமூக ஊடக பயன்பாடுகள் ஒரு இலட்சிய உலகத்திற்கு தப்பியோடிய நிலையாகவும் மாறலாம். குறிப்பாக குறைந்த சுயநம்பிக்கை உள்ளவர்கள் ஆபத்துக்கு உள்ளாகின்றனர். தொடர்ச்சியான இடுகைகளினூடாக ஒருவர் மற்றவர்களின் கவனத்தையும் உறுதிப்படுத்தலையும் பெறுகின்றார். சில பயனர்கள் மற்றவர்களுடைய விருப்பங்களும் கருத்துகளும் தோன்றத் தவறாமல் இருப்பதற்காக தொடர்ந்து இடுகைகளை வெளியிட தங்களை அழுத்தத்திற்கு உட்படுத்துகின்றார்கள். இது மனச்சோர்வை ஏற்படுத்தும்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் சமூக வலைப்பின்னல்கள் இல்லாமல் சில நாட்கள் செலவிடுவதை கற்பனை செய்து பார்க்க முடியாது. முக்கியத்துவங்கள் மாற்றம் பெறும்: மெய்நிகர் தொடர்புகள் உண்மையான தொடர்புகளை விட முக்கியமானதாகி வரும், பொழுதுபோக்குகள் குறைவாக முக்கியத்துவம் பெறும் மற்றும் வேலை கூட புறக்கணிக்கப்படலாம். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து செயலிகளின் பயன்பாடுகளைப் பற்றி சிந்திக்கிறார்கள், மேலும் அவர்கள் செயலிகளை பயன்படுத்த முடியாதபோது அவர்களின் மனநிலை மோசமடைகிறது.

உங்கள் அன்றாட வாழ்க்கை அடிக்கடி சமூக ஊடகங்களில் நடந்தால், நீங்கள் தொலைபேசியை அடிக்கடி அணுகுவது அதிகரித்தால், நீங்கள் உங்கள் சொந்த இணையப்பாவனையை உன்னிப்பாகக் கவனிப்பது பலன்தரும். இப்படியான சந்தர்ப்பங்களில் நிபுணத்துவத்துடன் உங்களுக்கு உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

பின்வருமாறு நாங்கள் உங்களுக்கு உதவுகின்றோம்.

இளைஞர்களுக்கான சலுகை: சமூக ஊடகங்களின் ஆரோக்கியமான பயன்பாட்டை மேம்படுத்த நாங்கள் உங்களுக்கு உதவுவோதோடு நாங்கள் உங்களுக்காக இருக்கின்றோம்.

தொடர்பு

நீல குருதி / MUSUB ஐ அறிய விரும்புகின்றீர்களா, எங்கள் முன்னேற்றங்கள் அல்லது சில பொருட்கள் மற்றும் அடிப்படைத்தன்மைகள் பற்றி கேள்விகள் உள்ளனவா? நாங்கள் இலவசமாக, இரகசியமாக மற்றும் எளிமையாக உங்களுக்கு உதவுகின்றோம்.

061 261 56 13
திங்கள் முதல் வெள்ளி வரை, ஒவ்வொரு நாளும் காலை 8:30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை.