👋 Neue Angebote  Entdecke unsere "Ganzheitliche Beratung" mit Akupressur, Aromaberatung und Yoga. Aromaberatung Workshops: Freitag 24.10.25 und Freitag 14.11.25  

Header Image

Kaufsucht

இது பழக்கங்களுக்கு அடிமையாதல் வகையில் உள்ளடங்குகின்றது. கொள்வனவுக் குறித்து சிந்திப்பதற்கு நிறைய நேரம் செலவழித்தல், அவ்வாறு செய்வதற்கான வலுவான தூண்டுதலை உணருதல், மற்றும் இறுதியில் கொள்வனவு மீதான கட்டுப்பாட்டை இழப்பதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் ஒருவருக்கு கொள்வனவு செய்த பொருட்கள் தேவையில்லாமல் போகலாம் அல்லது அவற்றில் ஆர்வத்தை விரைவாக இழக்க நேரிடும், ஒருவேளை பொதியை திறக்காமல் இருக்கலாம். இந்தப் பழக்கத்தின் சாத்தியமான எதிர்மறையான விளைவாக கடன் உருவாகலாம். . உணர்ச்சி மட்டத்தில் சுய நிந்தை, குற்ற உணர்வு மற்றும் மனச்சோர்வு ஆகியவை வலுவாகவும் மிக வலுவாகவும் மாறும்.

ஆரம்பத்தில் ஒரு நேர்மறையான உணர்வு அதாவது ஒரு வகையான வெகுமதி உணர்வு பொருட்கள் கொள்வனவின் போது இருக்கும். பின்பு அடிமைத்தனமாக மாறும் பொழுது கொள்வனவுப் பழக்கத்தின் செயல்பாடு மேலும் மேலும் விரும்பத்தகாத உணர்வுகள் மற்றும் நிலைகளை சமாளிக்க அல்லது அடக்க வேண்டிய தேவைகளை கொள்வனவு அடிமைத்தனம் ஏற்படுத்துகின்றது. இந்தத் தீயவட்டத்தை உடைப்பது என்பது ஒரு உண்மையான சவாலாகும்.

இது உங்களுக்கு இருப்பது தெரியவந்தால், கொள்வனவு அடிமைத்தனத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால் அல்லது ஒரு வழியைத் தேடுகிறீர்களானால், நீங்கள் எங்களிடம் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள்.

தொடர்பு

நீல குருதி / MUSUB ஐ அறிய விரும்புகின்றீர்களா, எங்கள் முன்னேற்றங்கள் அல்லது சில பொருட்கள் மற்றும் அடிப்படைத்தன்மைகள் பற்றி கேள்விகள் உள்ளனவா? நாங்கள் இலவசமாக, இரகசியமாக மற்றும் எளிமையாக உங்களுக்கு உதவுகின்றோம்.

061 261 56 13
திங்கள் முதல் வெள்ளி வரை, ஒவ்வொரு நாளும் காலை 8:30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை.