Header Image

உங்களுக்காக இருக்கும் ஒருவர் தேவையா?.

போதைப்பொருள் பாவனை உங்களை ஆசுவாசப்படுத்த அல்லது உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறதா அல்லது உங்கள் உறவில் அல்லது வேலையில் பதற்றத்தை ஏற்படுத்த காரணமாக அமைகின்றதா­?. இவை அல்லது இது போன்ற கேள்விகள் உங்களுக்குப் பிரச்சினையா?

இந்நிலையை மாற்றுவதற்கான வாய்ப்புகள் மற்றும் வழிகளைத் தேடுகிறீர்களா?

அப்படியானால் நீங்கள் எங்களுடன் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். முதலாவது உரையாடலில், நீங்கள் உங்கள் தனிப்பட்ட கவலைகள், மாற்றத்திற்கான உங்கள் விருப்பம், உங்களது சாத்தியமான இலக்குகள், உங்கள் கேள்விகள் மற்றும் அச்சங்களை முன்வைப்பீர்கள். பிறகு உங்கள் தனிப்பட்ட சூழ்நிலை மற்றும் உங்கள் சூழலுக்கு ஏற்றவாறு எங்கள் சலுகைகள் மற்றும் சாத்தியமான தீர்வுகள் பற்றிய தகவல்களைப் பெறுவீர்கள்.

மது மற்றும் போதைப் பழக்கம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் எங்கள் ஆலோசனை மற்றும் சிகிச்சையின் உள்ளடக்கமாக நாங்கள் உங்களுக்கு நிபுணத்துவ, நம்பிக்கையான மற்றும் இலவச ஆதரவை வழங்குகிறோம்.

நாங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு கையாளும் திட்டத்தை உருவாக்கி, உங்கள் தனிப்பட்ட இலக்குகளை அடைவதில் உங்களுக்கு ஆதரவளிப்போம்.

எங்கள் சலுகைகளின் உள்ளடக்கம்

  • தகவல் மற்றும் தெளிவுபடுத்தல்
  • சுருக்கமான ஆலோசனை
  • வெவ்வேறு மொழிகளில் தனிநபர்கள், தம்பதிகள் மற்றும் குடும்பங்களுக்கான ஆலோசனை
  • இடம்பெயர்வு தொடர்பான கேள்விகள்
  • வடிவமைக்கப்பட்ட மனநல மற்றும் உளவியல் சிகிச்சை
  • நிபுணத்துவ உதவி
  • அரச நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகள் (ஓட்டுநர் உரிமம் திரும்பப் பெறுதல்)
  • பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான குழுக்கள் மற்றும் கற்தைநெறிகள் (தற்போது ஜெர்மன் மற்றும் செர்போ-குரோஷியாவில் மொழிகளில் மட்டுமே நடைபெறுகின்றது)
  • குடும்ப வன்முறை பற்றிய ஆலோசனை
Bruno Scopel

Bruno Scopel

Bereichsleitung Suchtberatung Blaues Kreuz
Stv. Geschäftsleiter

Philippe Schmidt

Philippe Schmidt

Bereichsleitung MUSUB

தொடர்பு

நீல குருதி / MUSUB ஐ அறிய விரும்புகின்றீர்களா, எங்கள் முன்னேற்றங்கள் அல்லது சில பொருட்கள் மற்றும் அடிப்படைத்தன்மைகள் பற்றி கேள்விகள் உள்ளனவா? நாங்கள் இலவசமாக, இரகசியமாக மற்றும் எளிமையாக உங்களுக்கு உதவுகின்றோம்.

061 261 56 13
திங்கள் முதல் வெள்ளி வரை, ஒவ்வொரு நாளும் காலை 8:30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை.