Header Image

புகைப்பிடித்தல்

சுவிட்சர்லாந்து முழுவதும் ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புகைப்பிடிக்கிறார்கள். புகைபிடித்தல் இரட்டை சார்புநிலைக்கு வழிவகுக்கிறது. ஒருபுறம், இது நிகோடின் மீது அடிமைத்தனத்தை உருவாக்க வழிவகுக்கிறது, மறுபுறம், கையில் சிகரெட் வைத்திருப்பது ஒரு சடங்காக மாறும் போது மிதமான பழக்க அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கிறது. நிகோடின் மூளையில் உள்ள நரம்புகளின் செய்திக்கடத்திச்சுரப்பிகளின் வெளியீட்டைத் தூண்டுகிறது, இது உளவியல் மற்றும் உடல்ரீதியான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது.

நிகோடினை சிகரெட், ஷீஷா புகைக்குழாய், சுருட்டு, பீடி அல்லது மற்ற குழாய்கள் ஊடாக நுகரலாம். மூக்கின் வழியாக நுகரப்படும் ஸ்னஸ் என்று அழைக்கப்படுவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புகையிலையின் ஒரு கலவையாகும். சில நேரங்களில் வாய் புகையிலை என்றும் அழைக்கப்படும் இது பின்கடைவாய்ப்பல் மற்றும் தாடைக்கு இடையில் வைக்கப்படும் சிறிய பைகளில் நிரப்பப்பட்ட புகையிலை ஆகும்.

இலத்திரனியல் சிகரெட்டுகள் சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமடைந்து வருகின்றன. அவை ஊதுகுழல், மீண்டும் மின்னேற்றக்கூடிய ஒரு மின்கலம், ஒரு மின்சார தெளிகருவி, மற்றும் ஒரு புகைநீர் என்று அழைக்கப்படும் ஒருவித திரவத்தை மீள்நிரப்பி மாற்றக்கூடிய பொதியுறை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வாயில் ஊதுகுழலை வைத்து உள்ளிழுக்கும்போது இந்த திரவம் நீராவியாக தெளிக்கப்படுகின்றது. நிகோடின் உடன் மற்றும் இல்லாமல் இத்திரவங்கள் கிடைக்கின்றன. புகையிலை சிகரெட்டுகளுடன் ஒப்பிடுகையில், இ-சிகரெட்டுகள் ஒட்டுமொத்தமாக குறைவான தீங்கு விளைவிக்கும், ஆனால் ஆபத்துக்களை நிராகரிக்க முடியாது.

தொடர்பு

நீல குருதி / MUSUB ஐ அறிய விரும்புகின்றீர்களா, எங்கள் முன்னேற்றங்கள் அல்லது சில பொருட்கள் மற்றும் அடிப்படைத்தன்மைகள் பற்றி கேள்விகள் உள்ளனவா? நாங்கள் இலவசமாக, இரகசியமாக மற்றும் எளிமையாக உங்களுக்கு உதவுகின்றோம்.

061 261 56 13
திங்கள் முதல் வெள்ளி வரை, ஒவ்வொரு நாளும் காலை 8:30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை.