Header Image

Designerdrogen

MDMA மற்றும் கட்டமைப்பு ரீதியாக தொடர்புடைய பொருட்கள் செயற்கை ஆம்பெடமைன்(Amphetamin) வழித்தோன்றல்கள் வடிவமைப்பாளர் போதை மருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன, ஏனெனில் அவை முழுமையாக செயற்கை முறையில் ஆய்வகங்களில் தயாரிக்கப்படுகின்றன. MDMA மாத்திரை வடிவில் 1990 களில் இருந்து சுவிட்சர்லாந்தில் ஒ்ரு களிவெறி போதைப்பொருளாகவும் (Extasy), பின்னர் தூள் அல்லது படிக வடிவத்திலும் உருவாக்கப்படுகின்றது.

முக்கியமாக எக்ஸ்டஸி வில்லை வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது மற்றும் MDMA தூள் மூக்கினால் உறிஞ்சப்பட்டு நுகரப்படுகின்றது. பொழுதுபோக்கிற்கான பயன்பாட்டில் MDMA ஆதிக்கம் செலுத்துகிறது, ஆனால் உளத்தூண்டல் பொருட்களை உட்கொள்வதில் ஆபத்து இல்லாமல் இல்லை என்பது தான் உண்மை. பல போதை மூலப்பொருட்கள் கலக்கப்பட்டு, மதுச்சாரத்துடனும், நுகரப்பட்டால், அது பெரிய உடல்நல அபாயங்களுக்கு வழிவகுக்கும்.

ஆம்பெடமைன்கள் (Amphetamine) மற்றும் மெத்தம்பேட்டமைன்கள் (Methamphetamine( தூண்டுதல் விளைவுகளுடன் செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களாகும். ஆம்பெடமைன்கள், Speed எனவும் அழைக்கப்படும் இவை தூள் அல்லது மாத்திரை வடிவில் உள்ளவையாகும். அவற்றில் பெரும்பாலும் அசுத்தங்கள் மற்றும் காஃபின்(Koffein) போன்ற சேர்க்கைகளும் உள்ளன. Methamphetamine பெரும்பாலும் ஒரு மாத்திரையாக (தாய்லாந்து) மாத்திரை) அல்லது (Crystal, Ice) ஒரு தூளாக கிடைக்கிறது. இவை பெரும்பாலும் வாய்வழியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது அல்லது மூக்கினால் உறிஞ்சப்பட்டு நுகரப்படுகின்றது. மேலும் குறிப்பாக மெத்தாம்பேட்டமைனும் புகைக்கப்படுகிறது. நரம்புவழி ஊசிப்பயன்பாடு அரிதானதாகும். குறிப்பாக மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளானது மிகவும் அடிமையாக்கக்கூடிய மூலப்பொருளாகக் கருதப்படுகிறது.

ஆம்பெடமைன்களின் பயன்பாடு குறிப்பாக களியாட்டங்களில் பரவலானது. இருப்பினும், அவை செயல்திறன் மேம்படுத்தும் மற்றும் உடல் எடையை குறைக்கும் ஊக்கிகளாகவும் பயன்படுத்தப்-படுகின்றன. உங்கள் போதைப்பொருள் பயன்பாட்டை விமர்சன ரீதியாக கேள்வி கேட்க விரும்புகிறீர்களா? இதற்கு எங்கள் ஆலோசகர்கள் உங்களுக்கு உதவலாம்.

தொடர்பு

நீல குருதி / MUSUB ஐ அறிய விரும்புகின்றீர்களா, எங்கள் முன்னேற்றங்கள் அல்லது சில பொருட்கள் மற்றும் அடிப்படைத்தன்மைகள் பற்றி கேள்விகள் உள்ளனவா? நாங்கள் இலவசமாக, இரகசியமாக மற்றும் எளிமையாக உங்களுக்கு உதவுகின்றோம்.

061 261 56 13
திங்கள் முதல் வெள்ளி வரை, ஒவ்வொரு நாளும் காலை 8:30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை.