Header Image

கானபிஸ்

கஞ்சா என்பது ஒரு வகையான சணல் செடியைக் குறிப்பது மட்டுமன்றி மிகப் பழமையான மருத்துவப் பயனுள்ள தாவரங்கள் மற்றும் போதைப்பொருட்களில் ஒன்றாகும். கஞ்சா உலகளவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் உளத்தூண்டலை ஏற்படுத்தக்கூடிய சட்டவிரோதப் பொருளாகும். 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் கிட்டத்தட்ட 40% மற்றும் சுவிஸ் மக்களில் கால் பகுதியினர் ஒரு முறையாவது கஞ்சாவை பயன்படுத்தியுள்ளனர்.

இது பெரும்பாலும் கையால் சிகரெட் வகையான தாளினால் சுருட்டப்பட்டு புகைக்கப்படுகிறது. ஆனால் இதை உண்ணவும் செய்யலாம் (எ.கா. மாவுப் பலகாரமாக). அத்துடன் நீராவியாக்கிக்குழாய் (Shisha) மற்றும் நீர்க்குழாய்(Bongs) போன்றவற்றின் உதவியினுடனும் புகைக்கலாம்.

கஞ்சாவில் சுமார் 400 மூலக்கூறுகள் உள்ளன. அவற்றில் ஒன்று THC (டெல்டா -9-டெட்ராஹைட்ரோகன்னாபினோல்- Delta-9-Tetrahydrocannabinol), இது போதைத் தன்மைக்குக் காரணமாகிறது. CBD (Cannabidiol-கன்னாபிடியோல்) என்பதும் கஞ்சா தாவரத்தில் உள்ள ஒரு மூலப்பொருளாகும், இது உளத்தூண்டல் விளைவைக் கொண்டிருக்காது. அதனால் CBD-சணல்செடியானது போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வராது.

கஞ்சாவின் ஆசுவாசப்படுத்தும் மற்றும் தடைகளை களையும் விளைவுகள் பெரும்பாலும் பயனர்களால் விரும்பப்படுகின்றன. இருப்பினும், (குறிப்பாக நீண்ட கால மற்றும் தீவிரமான) நுகர்வு அடிமைத்தன மற்றும் பிற அபாயங்களையும் (மன, உடல், சமூகப்பாதிப்புக்கள்) கொண்டுள்ளது.

தற்போது கவனம் செலுத்தப்படும் ஒரு அச்சுறுத்தல் செயற்கை கன்னாபினாய்டுகள் (Cannabinoide) ஆகும். அவை கறுப்புச் சந்தையில் கஞ்சாவாக மாற்றப்படுகின்றன. இது கடுமையான விஷத்தன்மை உருவாக்கி மரணத்தை கூட ஏற்படுத்தலாம்.

உங்களுக்கு மேலும் தகவல் தேவைப்பட்டால், உங்கள் நுகர்வு பற்றி நீங்கள் சிந்திக்க விரும்பினால், உங்கள் நுகர்வினால் எதிர்மறையான விளைவுகளை நீங்கள் அனுபவித்தால், நீங்கள் அதை மாற்ற அல்லது நிறுத்த விரும்பினால், அப்படியானால் நீங்கள் எங்களுடன் சரியான இடத்தில் இருக்கிறீர்கள்.

தொடர்பு

நீல குருதி / MUSUB ஐ அறிய விரும்புகின்றீர்களா, எங்கள் முன்னேற்றங்கள் அல்லது சில பொருட்கள் மற்றும் அடிப்படைத்தன்மைகள் பற்றி கேள்விகள் உள்ளனவா? நாங்கள் இலவசமாக, இரகசியமாக மற்றும் எளிமையாக உங்களுக்கு உதவுகின்றோம்.

061 261 56 13
திங்கள் முதல் வெள்ளி வரை, ஒவ்வொரு நாளும் காலை 8:30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை.